உள்நாட்டு செய்திகள்

ரோயல் கல்லூரி 1ம் தர உட்சேர்ப்பு – விசாரணைகளின் பிற்பாடு 8பேர் பணிநீக்கம்..



கொழும்பு ரோயல் கல்லூரியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை உட்சேர்ப்பதில் ஏற்பட்ட முறைகேடுகள் குறித்த விசாரணைகளுக்கு பின்னர் பிரதான நேர்முக பரீட்சைக் குழு மற்றும் முறையீடுகளை முன்னெடுக்கும் குழு ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் எட்டுப் பேருக்கு பணி நீக்கம் விதிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பணி நீக்கம் முறையீடுகளை முன்னெடுக்கும் குழுவில் உள்ள பிறிதோர் பாடசாலையின் அதிபர், உப அதிபர்,பாடசாலை உதவி அதிபர், பிரிவின் தலைவர் மற்றும் ஆசிரியர்கள் சிலரும் உள்ளடங்குவதாக அத்தகவல் வட்டராங்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு ரோயல் கல்லூரியில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வது தொடர்பில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பெற்றோர்கள் கல்வியமைச்சில் முறைப்பாடுகளை செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முறைப்பாடுகளின் அடிப்படையில், கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இனது பணிப்புரைக்கு அமைய விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதோடு, அதில் சுமார் 40 மாணவர்கள் முறையற்ற விதத்தில் பாடசாலைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிய வந்துள்ளது.

 

Related posts

இராஜகிரிய மேம்பாலம் எதிர்வரும் 08 ஆம் திகதி மக்கள் பாவனைக்கு…

wpengine

மேலும் 339 பேர் சிக்கினர்

wpengine

உதய கம்மன்பிலவின் தாக்கல் செய்த அடிப்படை மனு விசாரணைக்கு..

wpengine