Top Story 2உள்நாட்டு செய்திகள்

ரூ.2,000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தனிமைப்படுத்தல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தமது வாழ்வாதரத்தை இழந்த குடும்பங்களுக்காக வழங்கப்படும் 2,000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதி பெற்றிருந்தும், இதுவரையில் குறித்த கொடுப்பனவு கிடைக்கப்பெறாதவர்கள் பிரதேச செயலகத்துக்கு மேன்முறையீடு செய்யமுடியும் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக குறித்த மேன்முறையீடை முன்வைக்க முடியும் என அவ்வமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த தெரிவித்துள்ளார்.

நிவாரணக் கொடுப்பனவைபெற தகுதிபெற்றவர்களில் சுமார் 50% மானோருக்கு 2,000 ரூபா கொடுப்பனவு செலுத்ததப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சைட்டம் தனியார் கல்லூரிக்கு எதிராக 121 தொழிற் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில்..

wpengine

பசில் ராஜபக்ஷவிற்கு வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு (UPDATE)

wpengine

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பல் பாதுகாப்பாக மீட்பு…

wpengine