உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

ரூபா. 2500 இற்கு எதிராக தனியார் பேரூந்து சங்கம் பணிபகிஷ்கரிப்பில்..


போக்குவரத்து ஒழுங்குவிதி மீறல்களுக்கான குறைந்தபட்சத் தண்டத்தை 2,500 ரூபாயாக உயர்த்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அனைத்து இலங்கை தனியார் பேருந்து சங்கம், சேவை புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளது.

இதன்படி இன்று(17) அளுத்கம பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கவிருந்த சுமார் 80 தனியார் பஸ்கள் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளது.

இல 400 பயணப் பாதையினூடாக பயணிக்கும் அளுத்கம – கொழும்பு உள்ளிட்ட  குறித்த பஸ் நிலையத்திலிருந்து பயணிக்கும் களுத்துறை – மதுகம –பெலவத்த உள்ளிட்ட பகுதிகளில் பயணிக்கும் பஸ்களும் சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், களுத்துறை – பாணந்துறை – ஹொரண உள்ளிட்ட பஸ் நிலையங்களிலும் எதிர்ப்புகளை தெரிவித்து சேவை புறக்கணிப்பில் சாரதிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் நாட்களில் நாடாளாவிய ரீதியில் இந்த சேவை புறக்கணிப்பை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஏற்பாட்டாளர் குமார ரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றும் நாளையும் நாடளாவிய ரீதியில் மின் துண்டிப்பு

Azeem Kilabdeen

பேர்பச்சுவல் டெசரிஸ் நிறுவனம் மீதான சாட்சி பதிவுகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்…

wpengine

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இலங்கை மகளிர் அணி வெளியேற்றம்…

wpengine