உள்நாட்டு செய்திகள்

ருஹுணு பல்கலைக்கழகத்தின் 03 பீடங்கள் இன்று(17) ஆரம்பம்



(FASTNEWS|COLOMBO) – தற்காலிகமாக மூடப்பட்டுள்ள ருஹூணு பல்கலைக்கழகத்தின் வெல்லமடம வளாகத்திலுள்ள 3 பீடங்கள் இன்று(17) ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விஞ்ஞான பீடம், முதுகலை சமுத்திரவியல் மற்றும் தொழில்நுட்பப் பீடங்கள் ஆகியன இன்று திறக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் அமைதியின்மையுடன் செயற்பட்டதோடு, பல்கலைக்கழகத்தின் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளமையினால் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக வெல்லமடம வளாகத்தின் அனைத்துப் பீடங்களும் காலவரையறையின்றி மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, முகாமைத்துவ பீடம் எதிர்வரும் திங்கட்கிழமை திறக்கப்படவுள்ளதுடன், சமூக விஞ்ஞான பீடம் எதிர்வரும் 29 ஆம் திகதி திறக்கப்படவுள்ளதாக, ருஹூணு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Related posts

ரஜினிக்கு விசா மறுக்கப்படவில்லை

wpengine

கடற்படை வீரர்கள் 226 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

wpengine

உலகிலேயே மிக உயரமான கட்டிடத்தில் இலங்கை தேசிய கொடி…

wpengine