உள்நாட்டு செய்திகள்

ரியோ ஒலிம்பிக் சவாரி குறித்து தயாசிறி வாய்திறந்தார்..



ஒலிம்பிக் போட்டிக்கு 40 பேர் சென்றமை தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சு அமைச்சர் தயாசிறி ஜயசேகர கருத்துத் தெரிவித்துள்ளார்.

“இவ்வருட ரியோ ஒலிம்பிக்கிற்கு மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான 40 பேர் மாத்திரமே சென்றிருந்தோம், இதில் விளையாட்டுக்குழுவிற்கு தேவையான அதிகாரிகள் மற்றும் வீரர்களே உள்ளடங்கியிருந்தனர்.

வரலாற்றில் இதை விட அதிகமானவர்கள் சென்ற சந்தர்ப்பங்கள் அதிகம் இருக்கின்றனர், ஆனால் அவற்றை எல்லாம் கண்டு கொள்ளாதவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு மட்டும் சேறு பூசுவதற்காக இவ்வாறான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்” எனவும் தெரிவித்த அமைச்சர் இவற்றிக்கு தாம் முகங்கொடுக்க தான் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான தெளிவான அறிக்கையினை பிரதமருக்கு அனுப்பியுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

போதைப் பொருட்களுடன் ஒருவர் கைது

wpengine

எல்லோருக்கும் சமுர்த்தியை வழங்க பணம் இல்லை..!

wpengine

சைட்டம் குறித்த அரசின் தீர்மானத்திற்கு GMOA எதிர்ப்பு..

wpengine