உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரிக்கெற் எடுக்குமாறு கூறிய பஸ் நடத்துனருக்கு பெண் ஒருவர் அடி உதை!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

கொழும்பிலுருந்து கண்டி நோக்கி சென்று கொண்டிருந்த பஸ்ஸில் பயணித்த பெண் ஒருவர், பஸ்ஸின் நடத்துனரை உதைத்ததில் பஸ்ஸிலிருந்து கீழே  தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.  இந்தச் சம்பவம் இன்று (15) இடம்பெற்றுள்ளது.

கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இ.போ. ச பஸ்ஸில் கிரிபத்கொடையைச் சேர்ந்த பெண் ஒருவர் ஏறியுள்ளார்

இதன்போது பயணச்சீட்டு எடுக்குமாறு நடத்துனர் தெரிவித்த நிலையிலேயே  அந்தப் பெண் அவரை  ​​கையால் தாக்கியதுடன்  உதைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பஸ்ஸிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணைப. பிடித்து கடவத்தை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

34 வயதான குறித்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவர் பல வருடங்களாக சிகிச்சை பெற்று வருவதாகவும் குடும்ப உறுப்பினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

பெண்ணும் நடத்துனரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்,  குறித்த பெண் மனநல சோதனைக்கு  உட்படுத்தப்படவுள்ளார்.

Related posts

கல்கிசையில் பகுதியில் தேடுதல் நடவடிக்கை முன்னெடுப்பு

wpengine

அடையாள அட்டை வழங்கும் விசேட சேவை இன்று

wpengine

அரச வைபவங்களுக்கு ஹோட்டல்களை உபயோகிக்க தடை..

wpengine