ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு மஹிந்த சம்மதம் இல்லையாம்..



கூட்டு எதிர்க்கட்சியினரால் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை 39 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் நேற்று(24) கையளிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும், முன்னாள் ஜனாதிபதி தற்போதைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ கையொப்பம் இடவில்லை என தெரியவருகின்றது.

அரசாங்கத்தின் மதிப்பீட்டுப் பெறுமதியை விட குறைந்த விலையில் மோதர மீன்பிடி துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கியமை உள்ளிட்ட 11 குற்றச்சாட்டுக்கள் அமைச்சர் ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

 

(rizmira)

Related posts

தேர்தலில் இருந்து விலகும் ரணில்; சஜித் தரப்பு எடுத்த முடிவு

wpengine

வசந்த சேனாநாயக உள்ளிட்ட 5 பேர் கோட்டாபய மேடையில்

wpengine

லசித் மாலிங்க தாயகம் திரும்பினார்..

wpengine