உலக செய்திகள்

ரஷ்ய விமானத்தை வீழ்த்திய விதத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு சான்று



ரஷ்ய விமானத்தை வீழ்த்தியது எப்படி என்ற தகவல்கள் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் இதழ் ஒன்றில் வெளியாகியுள்ளது.

கடந்த 31ஆம் திகதி எகிப்து நாட்டின் ஷரம்–எல்–ஷேக் நகரில் இருந்து ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு 217 பயணிகள் மற்றும் 7 ஊழியர்களுடன் புறப்பட்ட ஏர்பஸ் ஏ–321 ரக விமானம் ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களிலேயே சினாய் தீபகற்ப பகுதியில் விழுந்து நொறுங்கியதில் அந்த விமானத்தில் இருந்த 224 பேரும் உயிரிழந்தனர்.

இந்த விமானத்தை நாங்கள் தான் சுட்டுவீழ்த்தினோம் என்று ஐ.எஸ் தீவிரவாதிகள் கூறிவந்த நிலையில், ஆரம்பத்தில் இதனை ரஷ்யா மறுத்தது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்னர், வெடிகுண்டு தாக்குதல் மூலம் விமான விபத்து நிகழ்ந்துள்ளது என்று ரஷ்யா அரசு அறிவித்தது.

இந்நிலையில், ரஷ்யா விமானத்தை எவ்வாறு வீழ்த்தினோம் என்பது குறித்து ஐ.எஸ் இதழ் ஒன்றில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதில், விமான நிலையத்தில் இருந்த பாதுகாப்பு குறைபாடுகளை பயன்படுத்தி, அன்னாசி பழச்சாறு பாட்டிலில் வெடிகுண்டுகளை மறைத்துவைத்து எடுத்துக்கொண்டு சென்று வெடிக்கவைத்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு ஆதாரமான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளன.

isisi

 

Related posts

பதற்றம் தணியாத நிலையில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்

wpengine

சீனாவில் அதிரடி தீர்ப்பு: ஊழல் வழக்கில் முன்னாள் மந்திரிக்கு மரண தண்டனை..

News Editor

கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்யும் திட்டமில்லை

wpengine