உலக செய்திகள்

ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 53 ஆக உயர்வு…



கிழக்கு சிரியாவில் உள்ள அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா நடத்திய விமானப்படை தாக்குதலில் பொதுமக்கள் 53 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 21 பேர் குழந்தைகள் என சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிரியாவின் பல்வேறு நகரங்களை ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தினர் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். அந்த நகரங்களை மீட்க சிரியா அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதற்காக, ரஷ்யா அரசும் சிரியா அரசுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில், ஐ.எஸ் அமைப்பு கட்டுப்பாட்டில் உள்ள கடைசி மாகாணங்களில் ஒன்றான டேர் அல்-ஜோரில் அல்-ஷஃபா கிராமத்தில் ரஷ்யா இராணுவம் வான்வழி நடத்தியது.

பொதுமக்கள் குடியிருப்புகளில் நடைபெற்ற தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டதாக அந்த கண்காணிப்பு குழு முதலில் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த தாக்குதலில் 21 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 3,40,000க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அணு ஆயுதங்களை தரம் உயர்த்துவோம் – விளாடிமிர் புதின்

wpengine

இஸ்லாமிய மதபோதகரிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் கெமரூம்

wpengine

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் உடல் நலக்குறைவால் காலமானார்…

wpengine