உலக செய்திகள்விசேட செய்தி

ரஷ்யாவை அண்டிய பகுதியில் பாரிய நிலநடுக்கத்துடன் சுனாமி எச்சரிக்கை..



ரஷ்யாவை அண்டிய வடக்கு பசுபிக் பெருங்கடலில் சக்தி வாய்ந்த, ரிக்டர் அளவில் 7.4 ஆக பதிவாகியுள்ள நில நடுக்கத்தினையடுத்து சுனாமி எச்சரிக்ககை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று(18) அதிகாலை 1.34 மணியளவில் குறித்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

ரஷ்யாவின் கம்சட்கா பெனிசுலா மற்றும் அலஷ்காவின் அலெயுடியன் தீவுகளுக்கும் இடையிலான பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் கடற்கரையில் இருந்து 300Km தொலைவிற்குள் சுனாமி ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த நிலநடுக்கத்தின் முன்னர் பல்வேறு அதிர்வுகளில் தொடர்ச்சியான சிறு சிறு நில அதிர்வுகள் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

வடகொரிய தலைவர் – ரஷ்ய ஜனாதிபதி சந்திப்பு…

wpengine

அமெரிக்காவுக்கு எதிராக “ஜிஹாத்” என்ற பெயரில் ஐ.எஸ். அமைப்பு இளைஞர்களுக்கு அழைப்பு

wpengine

மண்சரிவு எச்சரிக்கை – 390 பேர் வெளியேற்றம்

wpengine