Top Story 3உள்நாட்டு செய்திகள்

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் இலங்கைக்கான சேவையை ஆரம்பித்தது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவின் மிகப்பெரிய தனியார் விமான சேவையான ‘அஸூர் எயார்’ (Azur Air) இன் விமானம் இன்று (வியாழக்கிழமை) காலை இலங்கையை வந்தடைந்துள்ளது.

335 பயணிகளுடன் குறித்த விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

இதேவேளை, பிரான்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான ‘எயார் பிரான்ஸ்’ நாளை முதல் விமான சேவையைத் தொடங்கும் என சுற்றுலாத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கைக்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பித்துள்ள இந்த விமானங்கள் வாரந்தோறும் சேவையில் ஈடுபடும் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

மருத்துவ காரணங்களுக்காக வெளிநாடு செல்ல டிரான் அலஸ்ஸிற்கு நீதிமன்றம் அனுமதி

wpengine

முதல் போட்டி வெற்றி-தோல்வியின்றி நிறைவு…

wpengine

2018 – வரவு செலவுத் திட்டத்தின் 02ம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு இன்று..

wpengine