விளையாட்டு

ரஷித் கான் மற்றும் பும்ரா கிரிக்கெட் வரலாற்றில் உலக சாதனை..



ஆப்கானிஸ்தான் அணியின் இளம் சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான் 19 வயதிலேயே ஒருநாள் பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.

இவர் சமீப காலமாக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருவதோடு, தற்போது ஆப்கானிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை எதிர்த்து 05 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடியது. குறித்த ஐந்து போட்டிகளில் ரஷித் கான் 16 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

இதேபோல் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா சிறப்பாக பந்து வீசினார். இதனால் இருவரும் ஒருநாள் போட்டிக்கான பந்து வீச்சு தரவரிசையில் முதல் இடத்தை பிடித்துள்ளனர். இருவரும் முதல் இடத்தை பிடிப்பது இதுதான் முதன் முறையாகும்.

குறிப்பாக ரஷித்கான் 19 வயது 153 நாட்களில் முதலிடத்தினை பிடித்துள்ளதன் மூலம் மிக இளம் வயதில் முதல் இடத்தை பிடித்த வீரர் என்ற சாதனையைப் பெற்றுள்ளார்.

#rishma

Related posts

ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பங்களாதேஷ் வெற்றி

wpengine

பங்களாதேஷ் அணிக்கு வாழ்த்துக்கள் – இலங்கை அணியின் திறமையில் ஒருபோதும் திருப்தியில்லை – சந்திமால்..

wpengine

இந்தியா, பாகிஸ்தான் இடையில் டெஸ்ட் தொடர்?

wpengine