உள்நாட்டு செய்திகள்

ரவி கருணாநாயக்கவின் மகள் சீ.ஐ.டி முன்னிலையில்



(FASTNEWS|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் மகளான ஒனேலா கருணாநாயக்க இன்று(06) குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளாரென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியின் பிணைமுறி விநியோகம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள நியமிக்கப்பட்ட ஆணைக்குழு முன்னிலையில், உண்மைக்குப் புறம்பான சாட்சியம் வழங்கியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியுள்ளார்.

அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் அவரின் மகள் ஒனேலா கருணாநாயக்க ஆகியோர் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்றைய தினம் குற்றப் புலனாய்வு திணக்களத்தில் முன்னிலையாக வேண்டும் என அறிவிக்குமாறு கடந்த மாதம் 30 ஆம் திகதி அரசாங்கத்தின் சட்டத்தரணி, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ETI நிறுவன வைப்பாளர்களின் மனு பரிசீலிப்பதற்கான திகதி அறிவிப்பு

wpengine

நாட்டில் கொரோனா தொற்றுள்ளோரின் எண்ணிக்கை உயர்வு

wpengine

வவுனியா நகர சபையை கூட்டணி கைப்பற்ற மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!

wpengine