உள்நாட்டு செய்திகள்

ரவி உள்ளிட்ட 8 பேர் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 பேர் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இவர்களை, 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதிகளான தமித் தொடவத்த, மஞ்சுள திலகரத்ன மற்றும் மொஹமட் இர்ஷடீன் ஆகிய நீதிபதிகள் குழாமால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது, சட்டமா சார்பில் ஆஜரான சிரேஷ்ட பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஹரிபிரிய ஜனசுந்தர, பிரதிவாதிகளுக்கு பிணை வழங்குவதற்கு கடும் ஆட்சேபனையை தெரிவித்ததையடுத்து, பிரதிவாதிகளை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

wpengine

ஹெரோயினுடன் ஒருவர் கைது…

wpengine

அதிவேக வீதியின் இருமருங்கிலும், மரங்களை வளர்க்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்…

wpengine