உள்நாட்டு செய்திகள்

ரயில் சாரதிகள் இன்று(24)போக்குவரத்து அமைச்சருடன் கலந்துரையாடல்…



தாம் மேற்கொள்ளவிருந்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட ரயில் ஓட்டுநர்கள் தீர்மானித்துள்ளனர்.

சில கோரிக்கைகளை முன்வைத்து நேற்று(23) நள்ளிரவு முதல் இந்நடவடிக்கையை அவர்கள் முன்னெடுக்கவிருந்தனர்.

இந்நிலையில், போக்குவரத்து அமைச்சர் தொலைபேசி மூலமாக வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தாம், இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானித்துள்ளதாக, ரயில் ஓட்டுநர்கள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று(24) மாலை போக்குவரத்து அமைச்சருடன் தமது பிரச்சினைகள் குறித்து கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில்வே இன்று நள்ளிரவு முதல் நியமன வேலை போராட்டத்தில்

wpengine

04 மணி நேரத்தில் 2564 பேர் கைது…

wpengine

இலங்கை மத்திய வங்கியானது பிரதமரின் கீழ்…

wpengine