உள்நாட்டு செய்திகள்

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் பதவி விலகவில்லை – பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க



(FASTNEWS | COLOMBO) – போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் மற்றும் ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் இடையே நிலவி வரும் சர்ச்சை நிலையினை விரைவில் தீர்த்து வைப்பதாக போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ பதவி விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், தான் குறித்த பிரச்சினைக்கு தீர்வினை பெற்றுக் கொடுத்ததாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார்.

ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்த தனது இராஜினாமா கடிதத்தை போக்குவரத்து, சிவில் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் எல்.பி. ஜயம்பதியிடம் நேற்று(02) கையளித்ததாக ரயில்வே திணைக்கள வட்டாரத் தகவல்கள் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஊவா – வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பம்…

wpengine

சிறைச்சாலை பேரூந்து விபத்தில் 09 பேர் காயம்

wpengine

கொவிட்19 பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடவேண்டாம்

wpengine