உள்நாட்டு செய்திகள்

ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலை நிறுத்தம் தொடர்கிறது..



ரயில்வே ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற வேலை நிறுத்தம் காரணமாக பெரும்பாலான ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

குறித்த இந்த வேலைநிறுத்தம் காரணமாக இலட்சக்கணக்காக பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

கடந்த இரண்டு நாட்களாக ரயில் இல்லாத நிலையில், சிரமத்தை எதிர்நோக்கியுள்ள பயணிகளின் நலன்கருதி, ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ரயில் பணியாளர்கள், தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.

எனினும், இந்த கலந்துரையாடல் தோல்வியடைந்த நிலையில், ரயில் தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன.

இதையடுத்து, ரயில் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டார்.

ரயில் சேவை மீள ஆரம்பிக்கப்படும் வரை அனைத்து நகரங்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் மேலதிகமாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 

-reeshmaa

Related posts

கல்வியியற்கல்லூரி நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் கிடைக்காதவர்கள் தொடர்பு கொள்ளவும்…

wpengine

தேர்தல் ஆணையகத்தில் ரிஷாட் முறைப்பாடு

wpengine

தபால் திணைக்களத்தின் இலட்சினை புதிய வடிவில்

wpengine