உள்நாட்டு செய்திகள்

ரந்தீர் ரொட்ரிகோ மீது கட்சிசார் ஒழுக்காற்று நடவடிக்கை – பிரதமர் ஆணை..



திவுலப்பிட்டிய பகுதியில் கடந்த 23ம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐ.தே.கட்சியின் மாகாண சபை உறுப்பினர் ரந்தீர் ரொட்ரிகோ மீது கட்சிசார் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐ.தே.க. பொதுச் செயலாளர் கபீர் ஹாஷிமுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேற்படி சம்பவத்தில், ரந்தீர் ரொட்ரிகோவுடன் அவரது மனைவியான இந்தியப் பெண் ஹர்ஜோத் கௌர் மற்றும் ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீதான விசாரணையின் பின், எதிர்வரும் 07ம் திகதி வரை சந்தேக நபர்கள் ஏழு பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மினுவங்கொட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இலங்கையை பிச்சைக்கார நாடாக மாற்ற நான் தயாராக இல்லை..!

wpengine

சரத் பண்டார – நிஷாந்த சேனாரத்ன விளக்கமறியலில்

wpengine

நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த அறுவருக்கு விளக்கமறியல்..

wpengine