உள்நாட்டு செய்திகள்

ரத்மலானை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மாகாண ச​பை உறுப்பினர் காயம்…



ஹெட்டியாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை, ரத்மலானை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் மேல் மாகாண ச​பை உறுப்பினர் அமல் சில்வா காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை

wpengine

கொரியாவில் இலங்கையருக்கான வேலைவாய்ப்பு அதிகரிப்பு

wpengine

சாகல ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

wpengine