உள்நாட்டு செய்திகள்

ரத்துபஸ்வல சம்பவம் குறித்த வழக்கு விசாரணைகள் நிறைவுக்கு..



ரத்துபஸ்வலையில் இளைஞர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக, குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களம் நீதிமன்றத்திறகு அறிவித்துள்ளது.

அது தொடர்பான வழக்கு இன்று(24) கம்பஹா நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்து கொள்ளப்பட்ட போதே, இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில், குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள, இராணுவ பிரிகேடியர் அதிகாரி உள்ளிட்ட 4 பேர் நீதிமன்றில் முன்னிலையான வேளை, அது குறித்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மார்ச் மாதம் 28ஆம் திகதி வரையில் ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2013ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி, குறித்த பிரதேசத்தில் குடிநீருக்காக போராட்டம் நடத்தியவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

#reeh

Related posts

ஜனாதிபதியின் பொங்கல் வாழ்த்து செய்தி…

wpengine

சர்வதேச நகரங்கள் தொடர்பான 6 ஆவது மாநாடு இன்று ஆரம்பம்…

wpengine

கோரிக்கை முன்வைக்கப்பட்டால், எந்தச் சந்தர்ப்பத்திலும் இராணுவம் களமிறங்கத் தயார்..

wpengine