உள்நாட்டு செய்திகள்

ரத்கம வர்த்தகர்கள் கொலை – பொலிஸ் அதிகாரிகள் இருவரும் மீண்டும் விளக்கமறியலில்…



(FASTNEWS-COLOMBO) ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் அதிகாரிகள் இருவரும், எதிர்வரும் மார்ச் மாதம் 13ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று(27) உத்தரவிட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணை பிரிவின் பொலிஸ் பரிசோதகர் கபில நிசாந்த மற்றும் உப பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை

wpengine

இன்றும் பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

wpengine

பொலித்தீன் உற்பத்தி பொருட்கள் இறக்குமதிக்கு தடை

wpengine