உள்நாட்டு செய்திகள்

ரணில் பதவியேற்று 5 மாதங்கள் நிறைவடைந்திருந்தாலும், இதுவரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை..!

புதிய அரசியல் கூட்டணி தொடர்பான தகவல்கள் அடுத்த மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கூட்டணியை அமைப்பது குறித்து எதிர்க்கட்சிகளுடன் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை முன்னிலைப்படுத்தி அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தாம் தீர்மானித்துள்ளதாக வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை தற்போது முன்னெடுத்துள்ள போதிலும், நாட்டு மக்களின் உரிமையை பாதுகாப்பது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் தொடர்பான விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளதால் தேர்தலை பிற்போட அரசாங்கம் அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுக்காது எனவும் அவ்வாறு நடக்கும் பட்சத்தில் அதனை தாம் எதிர்பார்ப்பதாகவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

மேலும், ரணில் விக்ரமசிங்க அதிபராக பதவியேற்று 5 மாதங்கள் நிறைவடைந்திருந்தாலும் நாட்டில் உள்ள பிரச்சினைகளுக்கு இதுவரை எந்தவொரு தீர்வும் காணப்படவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 

Related posts

யோஷித்த ராஜபக்ஷ நீதிமன்றில் ஆஜர்

Azeem Kilabdeen

பஸ்ஸும் சாரதிகளும் !

wpengine

தீவிரவாத தாக்குதல் குறித்து உரிய விசாரணை

wpengine