விளையாட்டு

ரஞ்சி கிண்ணப் போட்டியில் உத்தப்பா சாதனை



டெல்லி அணிக்கு எதிரான ரஞ்சி கிண்ணப் போட்டியில் கர்நாடக வீரர் ராபின் உத்தப்பா ஒரு ஓவரில் 32 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.

ரஞ்சி கிண்ணப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி- கர்நாடகா அணிகள் மோதின.

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய கர்நாடக அணி 3 விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்கள் எடுத்தது, ராபின் உத்தப்பா 148 ஓட்டங்கள் எடுத்தார்.

95 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஷோரோ வீசிய ஓவரில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 32 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார்.

இதன் மூலம் ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் கர்நாடக அணிக்காக அதிக சதம் அடித்தவர்களின் பட்டியலில் 2வது இடத்தை டிராவிட்டுடன் பகிர்ந்துகொண்டார்.

 

Related posts

முரளிதரனின் சாதனையை சமன் செய்தார் அஸ்வின்

wpengine

காலிறுதியில் கால் வைத்தார் சாய்னா

wpengine

டேவிட் வார்னருக்கு சவால் விடுக்கும் குல்தீப் யாதவ்…

wpengine