உள்நாட்டு செய்திகள்

ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய வாகனம் விபத்து…



இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார செலுத்திய கெப் ரக வாகனம் இன்று(06) அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

வாகனத்தை கட்டுப்படுத்த முடியாமல் சென்றுள்ளமை காரணமாக புத்தளம் ஆராச்சிக்கட்டுப் பகுதியி்ல் மதிலொன்றை உடைத்துக் கொண்டு வீடொன்றுக்குள் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தில் யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் சிகிச்சைகளை பெற்று வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளதுடன், யசோத ரங்கே பண்டார உள்ளிட்ட இருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற போது இராஜாங்க அமைச்சரின் மகன் மதுபோதையில் இருந்தாரா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

ஐக்கிய தேசிய முன்னணியின் தீர்மானம் நாளை

wpengine

அட்மிரல் வசந்த தொடர்பான ஆவணங்கள் ஆணைக்குழுவுக்கு

wpengine

மைதானத்தில் மோதிக்கொண்ட சக அணி வீரர்களான ஹர்பஜன் – ராயுடு

wpengine