உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ரக்னா லங்கா நிறுவன மோசடி விசாரணை இறுதிக் கட்டத்தில் – ஜனாதிபதி ஆணைக்குழு



ரக்னா லங்கா நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பிலான விசாரணை நடவடிக்கைகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக, பாரிய மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நூற்றுக்கு 80 வீதமான விசாரணைகள் இதுவரை நிறைவடைந்துள்ளதாகவும், அந்த ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்தக் குறித்த சம்பவம் குறித்து எவன்காட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியின் வாக்குமூலத்தை ஜனவரி 3ம் திகதிக்கு பின்னர் பெற, நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.

எவ்வாறிருப்பினும், முன்னதாக சில சந்தர்ப்பங்களில் சாட்சியமளிக்குமாறு நிஸ்ஸங்க சேனாதிபதிக்கு ஆணைக்குழு அழைப்பு விடுத்தது.

எனினும் சுகயீனம் காரணமாக ஜனவரி 3ம் திகதி வரை ஆணைக்குழுவில் ஆஜராக முடியாது என அவரது சட்டத்தரணி தெரியப்படுத்தியுள்ளதோடு, அது குறித்த வைத்திய அறிக்கையையும் ஆணைக்குழுவில் சமர்ப்பித்துள்ளார் என லெசில் டி சில்லா தெரிவித்துள்ளார்.

இதன்படி ஜனவரி 3ம் திகதிக்கு பின்னர் நிஸ்ஸங்கவிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

15 வயது முழுமையடைந்தவர்களுக்கு தேசிய அடையாள அட்டை…

wpengine

இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் மேலும் சில அமைச்சர்கள் விபரம்

wpengine

நேவி சம்பத் உள்ளிட்ட சந்தேகநபர்களுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine