உள்நாட்டு செய்திகள்

ரகர் வீரர் தாஜுடீனின் கொலையுடன் பல முக்கியர்கலுக்கு தொடர்பு – புலனாய்வு பிரிவு



பிரபல இலங்கை ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் பல முக்கிய உறுப்பினர்களுக்கும் தொடர்பு உள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோசித ராஜபக்ஷ, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு உண்டு என மேலும் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இக்கொலை இடம்பெற்ற காலகட்டத்தில் அரசியல் அழுத்தங்கள் காரணமாக இச்சம்பவம் ஒர் விபத்து என பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்தியிருந்தனர். எனினும் ஆட்சி மாற்றத்தின் பின்னர் விசாரணைகள் மீள ஆம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொலை செய்யப்பட்ட தாஜுடீனின் மரணமானது விபத்து என வர்ணிக்கப்பட்டமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

அதேவேளை, மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் இவ்வாறான குற்றச் செயல்கள் மூடிமறைக்கப்படுவது வழமையானது என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

(riz)

 

Related posts

முன்னாள் பிரதி அமைச்சர் சரத்குமாரவின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

கொரோனா தகவல்களை வழங்குவதற்காக ஊடக மத்திய நிலையம்

wpengine

தகவலறியும் சட்டமூலம் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்றில்

wpengine