உள்நாட்டு செய்திகள்

யோஷித மற்றும் டெய்சியிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஆகியோருக்கு குற்றப்பத்திரிகைகள் கையளிக்கப்பட்டதன் பின்னர், அவர்களை பிணையில் விடுவிக்க கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (4) உத்தரவிட்டது.

குறித்த இருவர் மீதும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகைகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் கையளிக்கப்பட்டன.

இதன்போது பிரதிவாதிகளை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அதன்படி, இது தொடர்பான விரிவான விசாரணைகளை மே 30 ஆம் திகதி நடத்துவதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related posts

அவன்கார்ட் நிஷ்சங்க சேனாதிபதியை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு..

wpengine

இதுவரை 894 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

அலி சப்ரி ரஹீம் விவகாரம்: சுங்க பணிப்பாளர் நாயகத்திடம் அறிக்கை கோரியுள்ள சபாநாயகர்..!

wpengine