உலக செய்திகள்

யேமன் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஐ.நா. வரவேற்பு


யேமனில் அமுலுக்கு வந்துள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஐக்கிய நாடுகள் சபை வரவேற்றுள்ளது. அந்நாட்டில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக இடம்பெற்றுவந்த மோதல்களில் 6,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

அந்நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கான ஒரு உண்மையான வாய்ப்பை இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் வழங்குவதாக யேமனுக்கான ஐ.நா. தூதுவர் தெரிவித்துள்ளார்.

யேமன் தலைநகர் சனாவுக்கு வெளியே சில போர்நிறுத்த ஒப்பந்த மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

சவுதி தலைமையிலான கூட்டுப்படையின் ஆதரவுபெற்ற அந்நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவான படைகளுக்கும் ஈரான் ஆதரவு கிளர்ச்சிக்காரகளுக்கும் இடையிலான மோதல்களால், 20 இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்

Related posts

சிரியாவில் ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி…

wpengine

சொகுசு பேரூந்து கவிழ்ந்த விபத்தில் 11 பேர் உயிரிழப்பு…

wpengine

ஆப்கான் தாக்குதலை ISIS பொறுப்பேற்றது…

wpengine