ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

யுவராஜ் காதலியை கைவிட்டு மொடல் அழகியுடன்



இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான யுவராஜ் சிங் ஊடகங்களில் வெளியான தனது திருமணம் செய்தி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் தனது நீண்ட நாள் தோழி கீதா பாஸ்ராவை திருமணம் செய்து கொண்டார்.

இதன் பின்னர் யுவராஜ், ஹர்பஜன், ஷேவாக் திருமணம் பற்றி டிவிட்டரில் பரபரப்பாக பேசிக் கொண்டனர். அவர்கள் யுவராஜை விரைவில் திருமணம் செய்து கொள்ளமாறும் அறிவுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் யுவராஜ், இங்கிலாந்து மொடல் அழகியும், நடிகையுமான ஹேசல் கேச்சை காதலிப்பதாகவும், இவர்கள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளிவந்த வண்ணம் இருந்தது.

இருவரும் பற்றி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், ‘இது வெறும் வதந்தி’ என்று வெளியான செய்திக்கு யுவராஜ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில், “ஊடக நண்பர்களே, எனது திருமண இடத்தையும், மாதத்தையும் முடிவு செய்து விட்டனர். அப்படியே எனது திருமண திகதியையும் முடிவு செய்து விட்டால், நான் தயாராக இருக்க வசதியாக இருக்கும்” என்று கிண்டலடித்து குறிப்பிட்டுள்ளார்.

 

yuwaraj-tweet

Related posts

பெண் சட்டத்தரணிகளின் ஆடை நெறிமுறையில் மாற்றம்…

wpengine

புதிய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் முக்கிய இரு இடங்களுக்கு முன்னாள் நட்சத்திர வீரர்கள்…

wpengine

தனது சகோதரிக்காக சிறைவாசம் சென்ற ‘ஹிதுமதே ஜீவிதே’ இனது பிறந்த தின ஏற்பாடு.. (Photos)

wpengine