Top Story 2உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

யுவதியின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் – சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேராதனை போதனா வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென உயிரிழந்த யுவதியின் மரணத்திற்கு ஒவ்வாமையே காரணம் எனவும், அவருக்கு வழங்கப்பட்ட தடுப்பூசியில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட உபாதை காரணமாக கடந்த 11ஆம் திகதி பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பொத்தபிட்டிய, அலகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த சாமோதி சந்தீபனி மதுசிகா ஜயரத்ன (21 வயது) என்ற யுவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

எவ்வாறாயினும், ஊசி மூலம் மருந்து ஏற்றியதையடுத்தே அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

பெற்றோரின் இந்த குற்றச்சாட்டு தொடர்பில், சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் வினவிய போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

Related posts

ஷாணுக ரத்வத்த உள்ளிட்ட ஐவரதும் விளக்கமறியல் நீடிப்பு.

wpengine

புகையிரத பாதுகாவலர்கள் மற்றும் கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆரப்பாட்டத்தில்…

wpengine

அனைத்து உப மின் நிலையங்களிளும் இராணுவத்திர் பாதுகாப்பு கடமையில்

wpengine