உள்நாட்டு செய்திகள்

யாழ்.மாணவி வித்தியா வழக்கில் டீ-என்-ஏ பரிசோதனைக்கு அனுமதி



பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட யாழ் மாணவி வித்தியா குறித்த வழக்கின் சந்தேகநபர்களிடம் டீ.என்.ஏ பரிசோதனையை மேற்கொள்ள நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

இக்குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் நேற்று(26) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இக்குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர ஊடகங்களுக்கு குறிபிட்டார்.

இதன்படி தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களினதும் இரத்த மாதிரியை பெற்றுக் கொள்ள அனுமதி கிட்டியுள்ளதாகவும், அவற்றை டீ.என்.ஏ பரிசோதனைக்காக அனுப்பி அது தொடர்பான அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த வழக்கு மீண்டும் செப்டம்பர் முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(riz)

Related posts

நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக 05 வழக்குகள் விசாரணைக்கு..

wpengine

விசேட சுற்றிவளைப்புக்களில் 3711 பேர் கைது…

wpengine

வருமானமிழந்த பேரூந்து ஊழியர்களுக்கு நிவாரணம்

wpengine