உள்நாட்டு செய்திகள்

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் கல்வி நடவடிக்கைகள் காலவரையறையின்றி இடைநிறுத்தம்…



யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்.

பிரயோக விஞ்ஞான பீட மாணவர்களுக்கிடையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இன்று(28) காலை 8 மணிக்கு முன்னர் மாணவர்களை விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மோதல் தொடர்பிலான விசாரணைகள் இன்று(28) ஆரம்பிக்கப்படும் என யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் த.மங்களேஸ்வரன் தெரிவித்தார்

Related posts

மொணராகலை  மாவட்டம்

wpengine

மஹிந்த, கூட்டு எதிக் கட்சியுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை- ஸ்ரீ ல.சு.க.

wpengine

“தனிப்பட்டவர்கள் மேற்கொள்ளும் தவறுகளுக்காக  ஒட்டுமொத்த சமூகத்தின் மீதும் பழி சுமத்துகிறார்கள்”  கொழும்பில் அமைச்சர் ரிஷாட்!

wpengine