உள்நாட்டு செய்திகள்

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இன்று(14) கைக்குண்டு மீட்பு…


யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் கோவில் வளாகத்தில் இருந்து கைக்குண்டு ஒன்று இன்று(14) யாழ்ப்பாணப் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளது.

கோவில் புனரமைப்பு பணிகள் இடம்பெற்றுவரும் நிலையில் மதில் கட்டுவதற்காக அத்திவார வேலைக்காக மண்ணை வெட்டிய போது கைக்குண்டு தென்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினால் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசேட அதிரடிப் படையினரின் உதவியுடன் கைக்குண்டை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முதலாம் தர மாணவர்களை சேர்த்தல் வெள்ளியன்று

wpengine

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 15 மாணவர்கள் கைது…

wpengine

உலக கால் பந்தாட்டக் கிண்ணம் இன்று மக்கள் பார்வைக்காக..

wpengine