உள்நாட்டு செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில்..



யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர்.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று(17) காலை முதல் பல்கலைக்கழக நுழைவாசலுக்கு முன்னால் இந்த அடையாள உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, எதிர்வரும் 19ம் திகதி யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் சந்தித்து கலந்துரையாடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

இன்று(26) விசேட கட்சித்தலைவர்கள் கூட்டம்…

wpengine

கேப்பாபுலவு, மக்களின் காணிகள் இன்று(01) விடுவிக்கப்படும் என அறிவிப்பு…

wpengine

கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி விளக்கமறியலில்

wpengine