உள்நாட்டு செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை – பக்கச்சார்பற்ற விசாரணை இடம்பெறும்..


கொக்குவில் பகுதியில், யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில், பக்கச்சார்பற்ற விசாரணைகள் நடத்தப்படும் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் உறுதியளித்துள்ளார்.

பொலிஸார் மேற்கொண்டுவரும் விசாரணைகள் முழுமையாகப் பூர்த்தியடைந்ததும், சுயாதீன விசாரணையொன்றை நடத்துவதா என்பது பற்றி அரசாங்கம் தீர்மானிக்கும் என்றும் கூறினார்.

மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு தொடர்பில், 23/2 நிலையியற் கட்டளையின் கீழ், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே, பிரதமர் இதனைத் தெரிவித்தார். பல்கலைக்கழக மாணவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்தமை குறித்து கவலையளிப்பதுடன், இந்தச் செய்து சகலரையும் அதிர்ச்சியடையச் செய்ததாகவும் பிரதமர் கூறினார்.

நன்றி – அழகன் கனகராஜ் 

Related posts

இங்கிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதி

wpengine

37 பேருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…

wpengine

பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் சாரதி கைது

wpengine