உள்நாட்டு செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் மீள ஆரம்பம்…



யாழ். பல்கலைக்கழகத்தில் இடைநிறுத்தப்பட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று(13) மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ள கைதிகளின் வழக்குகளை வவுனியா நீதிமன்றத்திற்கு மாற்றுமாறு கோரியும் யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது.
இதேவேளை, வகுப்பு பகிஷ்கரிப்பிலும் மாணவர்கள் ஈடுபட்டனர்.

இதன்போது யாழ். பல்கலைக்கழகத்தின் கலை, மருத்துவம் மற்றும் முகாமைத்துவ பீடங்களின் கல்வி செயற்பாடுகள் பல்கலைக்கழக நிருவாகத்தால் கடந்த 31ம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுமார் 3 மணித்தியாலம் மஹிந்தவிடம் வாக்குமூலம் பெற்றுச் சென்ற குற்றப்புலனாய்வு அதிகாரிகள்… (UPDATE)

wpengine

முடக்கப்பட்ட சில பகுதிகள் விடுவிப்பு

wpengine

தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் காலம் நீடிப்பு

wpengine