உள்நாட்டு செய்திகள்

யாழில் பதற்றம் : STF களத்தில்



(ஃபாஸ்ட் நியூஸ் |   யாழ்ப்பாணம்) – யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கான தேர்தல் முடிவுகளில் இழுத்தடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு பதற்ற நிலை உருவாகியதை தொடர்ந்து பொலிசார் வரவழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது.

தேர்தல் முடிவுகளில் விருப்பு வாக்குகள் விடயத்தில் குழப்ப நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து யாழ். மாவட்ட தேர்தல் முடிவுகள் இதுவரை ஏன் வெளியிடப்படவில்லையென வாக்கெண்ணும் மையத்தில் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், எம்.ஏ.சுமந்திரன் குறித்த இடத்திற்கு வந்ததைத்தொடர்ந்து ஏனைய சில கட்சிகளுக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்தில் பொலிஸ் அதிரடிப்படையினர் மற்றும் பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சைட்டம் குறித்த ஜனாதிபதியின் தீர்மானத்தினை GMOA வரவேற்கிறது…

wpengine

மாலக சில்வா நீதிமன்றில் ஆஜர்

wpengine

பரஸ்பரம் கடந்த கால நினைவுகளை மீட்டியபடி புரிந்துணர்வை ஏற்படுத்த மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டி

News Editor