உள்நாட்டு செய்திகள்

யாழில் சிறுவர்களுக்கு இணையத்தளம் பார்வையிடத் தடை



யாழ்ப்பாணத்தில் இணையத்தள வசதிகளை வழங்கி வரும் நிலையங்களுக்கு சிறுவர்கள் அனுமதிக்கப்படுவதற்கு தடைவிதித்து யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

பாடசாலை வயதில் இருக்கும் பிள்ளைகள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களுக்குள் செல்ல வேண்டுமாயின் அவர்கள் தமது பெற்றோர், ஆசிரியர் அல்லது மூத்தவர்களுடன் அங்கு செல்ல வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மூத்தவர்கள் இன்றி வரும் சிறுவர்களுக்கு இணையத்தளத்தை பயன்படுத்த அனுமதி வழங்கும் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட வேண்டும் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட பிரதேசத்திற்கு மாத்திரமே இந்த தடையுத்தரவு பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர்கள் பல்வேறு துஷ்பிரயோகங்கள் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது அதிகரித்துள்ளதாக காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்ததை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்மாந்துறையில் நாளந்தம் காட்டு யானை௧ளின் தொல்லை! பொது மக்கள் அச்சத்தில்..!

wpengine

தொடர்ந்தும் 13 பேருக்கும் விளக்கமறியல்

wpengine

வருடத்தின் முதலாவது சந்திர கிரகணம் இன்று

wpengine