Top Story 3உள்நாட்டு செய்திகள்

யாழில் கஞ்சா செடியுடன் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  யாழ்ப்பாணத்தில் கஞ்சா செடி வளர்த்த குற்றச்சாட்டில் நேற்று (27) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் புன்னாலைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த 42 வயதுடைய நபர் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புகையிலை தோட்டத்தில் , புகையிலை கன்றுகளுக்கு மத்தியில் மிக சூட்சுமமான முறையில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக கிடைத்த இரகசிய தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் கஞ்சா செடியை கைப்பற்றினர்.

மீட்கப்பட்ட கஞ்சா செடி சுமார் 4 அடி உயரம் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கைது செய்யப்பட்டவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சுன்னாக பொலிஸார் சந்தேக நபரை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ.167 ஆக உயர்வு..

wpengine

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உள்ளிட்ட 9 பேருக்கு எதிராக மனு.

wpengine

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடன் கூடிய காலநிலை

wpengine