உள்நாட்டு செய்திகள்

யானைச் சின்னத்தில் களமிறங்குகின்றது தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு



வடக்கு கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை கருத்திற்கொண்டு அமைக்கப்பட்டுள்ள தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து எதிர்வரும் தேர்தலில் களமிறங்கவுள்ளது.

இதில், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், தொழிலாளர் தேசிய முன்னணி தலைவர் அமைச்சர் திகாம்பரம், மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர், ராஜாங்க அமைச்சர் ராதாகிருஸ்ணன் ஆகியோரின் இணைப்பிலேயே இக்கூட்டமைப்பு அமைக்கப்பட்டுள்ளமை குறிபிடத்தக்கது.

தமது கூட்டமைப்பு இன்று கூடி எந்த தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது என்பது குறித்து ஆராயும் என்று மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த மூன்று கட்சிகளும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தே போட்டியிடும் தீர்மானம் கீழ் மட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரியவருகின்றன.

(riz)

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 915 ஆக அதிகரிப்பு

wpengine

கடற்பகுதிகளில் காற்றின் வேகம் நாளை(01) முதல் அதிகரிப்பு

wpengine

4 இலட்சம் ரூபா நட்டஈடு வழங்க மேர்வின் சில்வாவுக்கு நீதிமன்றம் உத்தரவு.

wpengine