உள்நாட்டு செய்திகள்

மோதலில் தனியார் பேருந்து சாரதி உயிரிழப்பு- 04 பேர் கைது…


வெலிமடை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகில், அரச பேருந்து சாரதிக்கும், தனியார் பேருந்து சாரதிக்கும் இடையே நேற்று இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் தனியார் பேருந்தின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுப் பிற்பகல் பேருந்தின் பயண நேரம் தொடர்பில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அரச பேருந்தின் சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கைதானவர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நாளை விசேட சந்திப்பு..!

wpengine

ஓமந்தையில் ரயில் தடம்புரள்வு

Azeem Kilabdeen

ஆயிரத்திற்கு இன்றும் கூடுகிறது

wpengine