உள்நாட்டு செய்திகள்

மோதர, போக்குவத்த பகுதியில் துப்பாக்கிச் சூடு.. – ஒருவர் படுகாயம்..



கொழும்பு – 15 இல் மோதர, போக்குவத்த பகுதியில் இன்று(08) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இந்த சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இதன்போது கதிரான வத்த பிரதேசத்தினை சேர்ந்த 42 வயதுடைய நபரே படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த நபர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

reeshmaa..

Related posts

பாராளுமன்ற சபையில் முறைகேடாக நடந்து கொண்ட சம்பவம் தொடர்பிலான அறிக்கை நாளை மறுதினம்…

wpengine

மக்கள் பணிமனை திறப்புவிழாவில் ரிஷாட்

wpengine

வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள்

News Editor