Top Story 3உள்நாட்டு செய்திகள்

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்திற்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று அச்ச நிலைமையைக் கருத்திற் கொண்டு மோட்டார் வாகன திணைக்களத்தின் நாரஹேன்பிட்டி மற்றும் வேரஹெர அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் சுமித் சீ.கே. அலஹகோன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தேசிய போக்குவரத்து வைத்திய பரிசோதனைகளுக்கான அலுவலகமும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்கள் மேலும் உயர்வு

wpengine

புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் பியல் டி சில்வா நியமனம்…

wpengine

கொஸ்கம, சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ – விசாரணைகள் CID வசம்

wpengine