வணிகம்

மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறப்பு..



தேசிய பயிலுநர் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகள் அதிகார சபையின் கீழ் இயங்கும் ஒறுகொடவத்தை மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று(13) திறந்து வைத்தார்.

ஜப்பான் ஒத்துழைப்புக் கடனுதவியின் கீழ் 1540 மில்லியன் ரூபா செலவில் ஒறுகொடவத்தை பிரதேசத்தில் புதிய காணியில் மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடத் தொகுதி அதிநவீன தொழில்நுட்ப பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடியவாறு நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், நிர்வாகம் மற்றும் பயிற்சி பிரிவு ஆகியன 8,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளன.

பயிற்சி நிலையத்தில் காணப்பட்ட அனைத்து இயந்திரங்களும், பொறிகளும் திருத்தப்பட்டு மீள நிறுவுதல், நவீன தொழில்நுட்ப முறைகளைக் கற்பதற்கான பயிற்சி இயந்திரங்கள் ஐந்தினை புதிதாக நிறுவுதல், அதிகளவான பயிலுநர்களை புதிதாக சேர்த்துக் கொள்ளக் கூடியதாக இருத்தல் மற்றும் எதிர்காலத்தில் தேவையேற்படின் கட்டிடத்தில் மேலும் 05 மாடிகளை அதிகரித்துக் கொள்ளக் கூடிய வகையில் ஆரம்ப கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளமை இதன் விசேட அம்சமாகும்.

ஜப்பான் – இலங்கை நட்புறவின் நினைவுச் சின்னமாக 1985 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட மோட்டார் வாகனப் பொறியியல் பயிற்சி நிறுவனமானது, எமது நாட்டிற்கு கொண்டு வரப்படும் ஜப்பானிய மோட்டார் வாகனங்களைப் பழுதுபார்க்கும் தொழில்நுட்பவியலாளர்களை உருவாக்குவதற்கு தொடர்ச்சியாகத் தனது பங்களிப்பினை வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

(rizmira)

Related posts

அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி ரூ.182 ஐயும் தாண்டியது…

wpengine

தாஜ் சமுத்­திராவின் உரி­மைத்­து­வம் கைமாறியது

wpengine

மரக்கறி வகைகளின் விலைகள் வீழ்ச்சி

wpengine