உள்நாட்டு செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் மூவர் உயிரிழப்பு…



(FASTNEWS|COLOMBO) மட்டக்களப்பு – வந்தாறுமூலை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்திற்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள்களே விபத்திற்குள்ளாகியுள்ளன.

இதன்போது, மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரையாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

விபத்து தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பதுளை, ஹல்துமுல்லை – வங்கெடிகல மலைத்தொடரில் சற்றுமுன்னர் தீப்பரவல்…

wpengine

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 17 பேர் கைது..

wpengine

தபால் மூல வாக்களிப்பு நிறைவு

wpengine