ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

“மொஹமட் ரிஸ்வான் தற்கொலை தாரி அல்ல – தாக்குதலில் பலியான சிறுவன்”



(FASTGOSSIP | COLOMBO) – உயிர்த்த ஞாயிறன்று தாக்குதல்களுக்கு இலக்கான கொச்சிக்டை புனித அந்தோனியார் தேவாலயம் புனரமைப்பு செய்யப்பட்டு நேற்று(13) மீண்டும் திறக்கப்பட்ட நிலையில் தாக்குதலின் போது தேவாலயத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களின் பெயர்கள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளன.

குறித்த பெயர் பட்டியலில் “மொஹமட் ரிஸ்வான்” என்ற முஸ்லிம் ஒருவரின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் டுவிட்டர், பேஸ் புக் என சமூக வலைத்தளங்களில் மிகவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

குறித்த நபரே தற்கொலை குண்டு தாக்குதலை நடத்தியதாகவும், அவரது பெயரை கல்வெட்டில் பதித்துள்ளதாகவும் கண்டனங்கள் எழுந்தன.

இந்நிலையில் “மொஹமட் ரிஸ்வான் தற்கொலை தாரி அல்ல எனவும் அவர் தனது பெற்றோர் சகிதம் உயிர்த்த ஞாயிறு பிரார்த்தனைகளுக்காக வந்த 15 வயது மாணவன்” என கொச்சிக்கடை தேவாலய பிரதம மதகுரு குறிப்பிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தாஜுடீனின் கொலைக்கு காரணமான வேகம் தொடர்பில் மஹிந்த வாய்திறந்தார்..

wpengine

தங்கம் மற்றும் வைரக்கற்களால் தயாரிக்கப்பட்ட உலகிலேயே மிக அதிக விலையிலான பாதணி… (PHOTOS)

wpengine

நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்க போவதில்லை-ஜனாதிபதி

wpengine