உள்நாட்டு செய்திகள்வணிகம்

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் பாரிய வருமானம்…



மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தில் ஸ்தாபிக்கப்பட்ட மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் தேசிய மின் விநியோக வலைப்பின்னலுக்கு சேர்ந்த மின்வலுவின் மூலம் 900 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் செய்தி வௌியிட்டுள்ளது.

இந்த மின் உற்பத்தி நிலையத்தின் மூலம் வருடம் தோறும் 15 கோடி ரூபாவுக்கு மேலான பெறுமதி உடைய மின்வலுவை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக செயற்றிட்ட மக்கள் தொடர்பாடல் உத்தியோகத்தர் ஜி.ஜி.தாயனந்த தெரிவித்தார்.

மொரகஹகந்த களுகங்கை நீர்ப்பாசன திட்டத்தின் மூலம் பாசன நீரை விநியோகித்ததால், ரஜரட்ட வலயத்தில் 80,000 ஏக்கர் வயற்காணியில் பெரும்போக நெற்செய்கையை சிறப்பாக மேற்கொள்ள முடிந்ததாகவும் அவர் கூறினார்.

Related posts

முச்சக்கர வண்டிகளது பயணக் கட்டணங்களும் நாளை(12) முதல் அதிகரிப்பு…

wpengine

ஞானசார தேரரின் சிறுநீரகத்தில் கல்…

wpengine

வாகனங்களின் விலைகள் திடீரென அதிகரிப்பு…

wpengine