விளையாட்டு

மொயீன் அலிக்கு சிக்கல்



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொழும்பு) – கிரிக்கெட் தொடருக்காக இலங்கை வந்துள்ள இங்கிலாந்து அணியின் சகலதுறை வீரர் மொயீன் அலிக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு அவா் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

அவருடன் நேரடித் தொடா்பில் இருந்திருக்க வாய்ப்புள்ளதாக அறியப்படும் கிறிஸ் வோக்ஸும் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்பட இருப்பதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது. அதேபோல், எஞ்சிய இங்கிலாந்து அணியினரும் பரிசோதிக்கப்படவுள்ளனா்.

முன்னதாக, இங்கிலாந்தில் இருந்து புறப்படும்போது மொயீன் அலிக்கு கொரோனா பாதிப்பு இல்லாது இருந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தபோது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது.

இலங்கையில் இரு டெஸ்ட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

டி20 உலகக்கிண்ண தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரம்

wpengine

20வருட துக்கத்தினை மனதினுள் புதைத்து 700கி.மீ நடைப்பயணம் செய்த மஹேல கண்ணீர்மல்க கூறியது.. (VIDEO)

wpengine

இரண்டாவது இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இன்று

wpengine