ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

‘மொட்டுக்கு’ ஆதரவளிக்கச் சென்றமை குறித்து பாலித தெவரப்பெரும கருத்து..



பிரதி அமைச்சர் பாலித தெவரப்பெரும ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு தாவினார் என ‘Srilanka Brigade’ என்ற பெயரில் முகநூல் பக்கத்தில் நேற்று(21) பிரச்சாரங்கள் பரவியுள்ளது.

இது தொடர்பில் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெரும கருத்துத் தெரிவிக்கையில்;

“..களுத்துரை மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி தொடர்பில் வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு அங்கிருந்து நேரடியாக களுத்துரை விஹாரைக்கு சென்றிருந்தேன். அங்கு ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட எதிரணி உறுப்பினர்களை எதிர்பாராத விதமாக சந்திக்க நேரிட்டது.

இதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்களை எடுத்துக் கொண்டு சிலர் போலிப் பிரசாரங்களை face book வாயிலாக முன்னெடுத்து வருகின்றார்கள். இவ்வறான செயற்பாடுகளை முன்னெடுப்பார்கள் என்று நான் ஒருபோதும் சிந்திக்கவில்லை. எதிரணி உறுப்பினர்களை மனிதாபிமான நோக்கத்திலேயே சந்தித்து பேசினேன். அதனால் கட்சிதாவும் எண்ணமும் எனக்கு ஒருபோதும் வரவில்லை…” எனக் கூறியுள்ளார்.

Image may contain: 6 people, crowd and outdoor

Image may contain: 4 people, outdoor

Image may contain: 3 people, people standing and outdoor

Image may contain: 3 people, outdoor

#reeshma..

Related posts

TNA அரசியலிலும் குடும்ப ஆதிக்கமா??

wpengine

ரயி­லி­ல் ஆண் ஒரு­வரின் சடலம்

wpengine

கட்சி உறுப்புரிமை நீக்கம்; கைது செய்யுமாறு உத்தரவு ரஞ்சனின் எதிர்காலம் எப்படி?

wpengine