ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரி VS மங்கள மீளவும் முறுகலில்…

(FASTNEWS | COLOMBO)- ஜனாதிபதியின் பாதுகாப்பு அமைச்சின் கீழ் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பு வெளியிட்டதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடும் கோபமடைந்ததாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய(19) அமைச்சரவைக் கூட்டத்தின் போது, விமானப்படைக்கு விமானம் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு, பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும் அதற்கான நிதி ஒதுக்கீட்டுக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இதன் போது பேசிய ஜனாதிபதி, கடந்த நான்கு ஆண்டுகளில் விமானப்படை மற்றும் கடற்படைக்கான விமானங்கள் மற்றும் கப்பல்களைக் கொள்வனவு செய்ய முயன்றபோதெல்லாம் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதால், அவற்றைக் கொள்வனவு செய்ய முடியவில்லை என்று குறிப்பிட்டார்.

அதுமாத்திரமல்லாமல், விமானங்கள், கப்பல்களின் வெற்றிடத்தை மீள் நிரப்புவதற்கான, பரிந்துரைகளைச் செய்வதற்கு, குழுவொன்றை அமைக்குமாறும், ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் விமானப்படைக்கு வாங்கவுள்ள விமானம், 40 ஆண்டுகள் பழைமையானது என்பதால் தான் நிதி அமைச்சு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக மங்கள சமரவீர தரப்பு தெரிவித்துள்ளார்.

Related posts

இந்திய லெஜண்ட்ஸ் அணியில் கொரோனா கொத்தணி

wpengine

நாளைய(01) போட்டியில் விளையாடவுள்ள இலங்கை குழாம் – சுரங்க லக்மால்

wpengine

சதுரவின் திருமண வரவேற்பு அழைப்பிதல் ஒன்றுக்கு 8000 ரூபா… அலரி மாளிகையில் தாம் தூம்… (Photos)

wpengine